வத்திராயிருப்பு பகுதியில் மாங்காய் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை ...*

வத்திராயிருப்பு பகுதியில் மாங்காய் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை ...*;

Update: 2025-06-17 13:57 GMT
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மாங்காய் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை ... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளான அத்திகோயில், தாணிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மாங்காய் விவசாயம் பிரதானமாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் தற்பொழுது மாங்காய் சீசன் துவங்கியுள்ளது .இந்த நிலையில் மாங்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் சப்போட்டா பனாரஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டான வகையங்க ஆனா மாங்காய்கள் விவசாயம் செய்யப்பட்டுள்ள நிலையில் வெறும் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு மட்டுமேவிற்பனை செய்யப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் இது குறித்து மா விவசாயிகள் கூறும்பொழுது,தற்பொழுது மாங்காய் சீசன் நடைபெற்று வரும் நிலையில் தாங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விளைச்சல் இல்லாமலும், வருடம் தோறும் நோய் தாக்குதல் காரணமாகவும் பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருகின்றோம் .இந்த நிலையில் தற்பொழுது மாங்காய்க்கு போதிய விலை இல்லாமல் உள்ளது .15 வருடத்திற்கு முன்பு ஒரு கிலோ மாங்காய் 30 ரூபாய்ட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 15 வருடங்களுக்கு பின்பு தற்பொழுது வெறும் 15 ரூபாய் மட்டுமே ஒரு கிலோ மாம்பழத்தை விற்பனை செய்யக்கூடிய நிலை இருந்து வருகிறது. உடனே அரசு தங்கள் பகுதியில் ஒரு மா ஜூஸ் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் , மாங்காய்க்கு போதிய விளையையும் அரசே நிர்ணயிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News