ராசிபுரம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 15க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு மர்ம காய்ச்சல். சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி...

ராசிபுரம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 15க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு மர்ம காய்ச்சல். சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி...;

Update: 2025-09-03 14:50 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே தனியார் ஸ்பின்னிங் மில் ஆனது செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் இதில் பீகார், ஒடிசா,ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் தொழிற்சாலையில் வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் 15-க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காய்ச்சல் அதிகரிக்கவே தொழிற்சாலையின் மேலாளர் 15க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.அங்கு மருத்துவர்கள் அவர்களது முகவரியை பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே தொழிற்சாலையில் 15க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டதால் தொழிற்சாலையில் உள்ள மற்ற தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.எனவே தனியார் தொழிற்சாலையில் சுகாதாரத் துறையினர் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து அங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது...

Similar News