கோவையில் பிசியோதெரபி மசாஜ் பெயரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞரும், அத்தையும் கைது !

Update: 2025-09-11 07:52 GMT
கோவையில், பிசியோதெரபி மசாஜ் செய்வதாக கூறி 15 வயது மாணவிக்கு மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் தற்போது கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 2022-ம் ஆண்டு, அத்தை வீட்டிற்கு சென்றபோது சாகின் என்ற இளைஞர் மிரட்டி பலமுறை வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் தொடர்ந்து சாலையிலும் பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்ததாகவும் மாணவி தெரிவித்தார். இதுகுறித்து மாணவி தனது தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் கூறியதை அடுத்து, கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சாகின் மற்றும் மாணவியின் அத்தை மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அத்தையை கடந்த வாரம் கைது செய்த நிலையில், தற்போது சாகினையும் கைது செய்துள்ளனர்.

Similar News