தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றம் போக்குவரத்து துறை அமைச்சர் பேட்டி -

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது - போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.;

Update: 2025-05-29 17:37 GMT
அரியலூர், மே.29 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது - போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 86 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்ட இந்த பேச்சுவார்த்தையில் 64 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 14 மற்றும் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 6% ஊதிய உயர்வு, சலவைப்படி 160 ரூபாயாக உயர்வு, இரவு பணிப்படி 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் குறைந்தபட்சம் 1420 முதல் அதிகபட்சம் 6460 ரூபாய் கூடுதலாக ஊதியம் பெறுவர். 4 தவணையாக நிலுவைத்தொகை வழங்கப்படும். 2021 மே மாதம் முதல் இன்றுவரை ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.2,894.23 கோடி பணப்பலன்கள் வழங்கியுள்ளோம். பணியில் இறந்த பணியாளர்களின் 1,016 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை இன்றுவரை வழங்கியுள்ளோம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Similar News