ஜோலார்பேட்டை அருகே 150 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ஜோலார்பேட்டை அருகே சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 150 லிட்டர் ஊரல் அளிப்பு

Update: 2024-10-22 02:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சட்டவிரோதமாக சாராயம் காய்ச்ச பயன்படும் 150 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அவர் மீது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் திருப்பத்தூர் மதுவிலக்கு ஆய்வாளர் உலகநாதன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜி (26 ) என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் அவர் சட்டவிரோதமாக காய்ச்ச பயன்படுத்திய 150 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News