இராசிபுரத்தில், எனது இளைய பாரதம் சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தின ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சி தேசிய கொடியுடன் மாணவ மாணவிகள் ஊர்வலம்...
இராசிபுரத்தில், எனது இளைய பாரதம் சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தின ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சி தேசிய கொடியுடன் மாணவ மாணவிகள் ஊர்வலம்...;
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், எனது இளைய பாரதம் (Mera Yuva Bharath, My Bharath) அலுவலகம் சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தின ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான மாணவ மாணவிகள் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.. இந்தியாவின் முதல் துணை பிரதமர் /இரும்பு மனிதர் என்று போற்றப்படும், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம், ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்திய அரசின், இளைஞர் விவகாரத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், நாமக்கல்லில் உள்ள எனது இளைய பாரதம் அலுவலகம் சார்பில், சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியை, இராசிபுரம் - சேலம் சாலையில், காவல் உதவி ஆய்வாளர் பொ. கீதாலட்சுமி, வேளாண்மை கல்லூரி முதல்வர் Dr N.O. கோபால் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பாத யாத்திரை நிகழ்ச்சியில், தேசிய நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, எனது இளைய பாரதம் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500 பேர் கலந்துகொண்டு இராசிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மூவர்ண தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு, பாத யாத்திரையாக சென்றனர். சர்தார் வல்லபாய் பட்டேலின் வரலாறு, நாடுகளை ஒருங்கிணைத்த பெருமை, அவரது புகழ் ஆகியவற்றை பாராட்டும் வகையில், சர்தார்@150 ஒற்றுமை பாத யாத்திரை நடத்தப்பட்டது. இளைஞர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த பேரணியானது இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அருகில் இருந்து தொடங்கி, நாமக்கல் சாலை, கடைவீதி, ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று, இராசிபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில், ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்களை இராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் பொ. கீதாலட்சுமி, வேளாண்மை கல்லூரி முதல்வர் Dr. N.O. கோபால் ஆகியோர் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய, வேளாண்மை கல்லூரி முதல்வர் Dr N.O. கோபால், நமது நாட்டில் சுதந்திரம் பெறும் போது பல சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து, நமது நாட்டின் வலிமையை உயர்த்தியவர் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆவார். அவரது துணிவு மிக்க செயலால் இன்று நமது நாடு ஒற்றுமையுடன் உலகின் சிறந்த ஜனநாயக நாடாக திகழ்கிறது. அவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும், ஒற்றுமை பாதயாத்திரை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் மூலம் இளைஞர்கள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் ஆகியோருக்கு தேசப்பற்று மேம்படும். நேசநலம், ஒழுக்கம், நன்னடத்தை ஆகியவை குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் தேசிய ஒருமைப்பாடு சுதேசி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த பாதயாத்திரை நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட எனது பாரதம் அலுவலக பணியாளர்கள், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்..