மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று அந்த பகுதிக்கு சென்று ஒவ்வொரு கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை நடத்திய போது சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 152 புகையிலைப் பாக்கெட்டுகளை கண்டுபிடித்தனர். இவைகள் அனைத்தும் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் கருங்கல் அருகே அரிசிவிளை பகுதியை சார்ந்த லாசர் (64) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.