கலைஞர் குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி 154 பேரின் குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நல நிதிகளை அமைச்சர் எம்பி வழங்கினர்..

கலைஞர் குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி 154 பேரின் குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நல நிதிகளை அமைச்சர் எம்பி வழங்கினர்..;

Update: 2025-11-28 15:14 GMT
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற, கலைஞர் குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிழக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் திமுக குடும்ப உறுப்பினர்கள் 154 பேரின் குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நல நிதிகளை வழங்கி, ஆறுதல் தெரிவித்தனர்.. நாமக்கல் கிழக்கு மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், திமுக உறுப்பினர்களின் கலைஞர் குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் / பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஷ் குமார், கட்சியின் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைத்தலைவர்/ அமைச்சர் மா. மதிவேந்தன் ஆகியோர், வெண்ணந்தூர் ஒன்றியம் மற்றும் அத்தனூர் பேரூர் பகுதியில் உயிர் நீத்த திமுகவைச் திருவுருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உயிர் நீத்த திமுகவை சேர்ந்த 116 பேரின் குடும்பத்தினருக்கும், அத்தனூர் பேரூர் பகுதியில் உயிர் நீத்த திமுகவை சேர்ந்த 10 பேரின் குடும்பத்தினருக்கும் என 126 பேருக்கும் கலைஞர் குடும்ப நலநிதி வழங்கினார்கள். இதேபோல, வெண்ணந்தூர் பேரூர் பகுதியில் உயிர் நீத்த திமுகவைச் சேர்ந்த 28 பேரின் குடும்பங்களுக்கு கலைஞர் குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலதுணைத் தலைவரும் அமைச்சருமான மா. மதிவேந்தன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி கலைஞர் குடும்ப நல நிதிகளை வழங்கினர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், நமது கழகத்திலிருந்து பணியாற்றி, பல்வேறு காரணங்களால் உயிர் நீத்த வர்களுக்கு கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் குடும்ப நல நிதி வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு சிறிய தொகை என்றாலும் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு கழகம் எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.எம்.துரைசாமி , பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News