செண்பகவல்லி அம்மன் கோயிலில் உண்டியல் மூலம் ரூ.15.66 லட்சம் வருவாய்!
செண்பகவல்லி அம்மன் கோயிலில் உண்டியல் மூலம் ரூ.15.66 லட்சம் வருவாய்!;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் வளாகம் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயில், மார்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள 24 உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி செண்பகவல்லி அம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் கோமதி அறங்காவலர் குழு, உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, ரவீந்தர், செண்பகவல்லி அம்மன் கோயில் செயல் அலுவலர் (கூ.பொ) வள்ளிநாயகம், அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகலை பிரியா, கோயில் கண்காணிப்பாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீ நாரா ஆன்மீக சேவாக் குழுவினர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரூ.15 லட்சத்து 66 ஆயிரத்து 602 ரொக்கம், தங்கம் 17 கிராம், வெள்ளி 275கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.