திருப்பத்தூர் அருகே 16 வயது சிறுமியை காதலித்து கடத்தி சென்ற பேக்கரி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது
திருப்பத்தூர் அருகே 16 வயது சிறுமியை காதலித்து கடத்தி சென்ற பேக்கரி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது;

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 16 வயது சிறுமியை காதலித்து கடத்தி சென்ற பேக்கரி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது திருப்பத்தூர் மாவட்டம் சு.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (19) இவர் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் பேக்கரி கடையில் வேலை செய்து வந்துள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்லும் போது 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார்.அதன் பின்னர் கடந்த 19 ஆம் தேதி ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துகொள்வதற்காக சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இது குறித்து சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாராயணனை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.