விருதுநகரில் 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
விருதுநகரில் 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை;
விருதுநகரில் 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை விருதுநகர் எம்.செவல்பட்டியைச் சேர்ந்தவர்கள் மாரிசாமி - சந்திரா தம்பதியர். மாரிசாமி போர்வெல் வண்டி ஓட்டும் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் சந்தியா என்ற மகள் உள்ளார். இவர் மீசலூர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பெற்றோர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது. தாய் சந்திரா வெளியே சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்த போது வீடு உள்பக்கமாக அடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக அருகில் வசிப்பவர்களை அழைத்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது சிறுமி சந்தியா பேனில் தூக்கு போட்டு இறந்துள்ளது கண்டு அதிர்ச்சியுற்று சூலக்கரை காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த சூலக்கரை காவல் நிலைய போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.