பழனி முருகன் கோவில் உட்பட உப கோயில்களில் 16-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

பழனி;

Update: 2025-12-14 03:12 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட உப கோயில்களான குழந்தை வேலாயுத சுவாமி கோயில் (திருஆவினன்குடி), பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்பட பல்வேறு கோயில்கள்உள்ளன. இந்த கோயில்களில் வருகிற 16-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, அன்று முதல் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும்.

Similar News