உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 16741 மனுக்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் 16741 மனுக்கள் பெறப்பட்டுள்ளது,;
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் 16741 மனுக்கள் பெறப்பட்டுள்ளது, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு "தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கக்கூடியது தான் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த சிறப்பு திட்ட முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.07.2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து துவக்கி வைத்தார்கள். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 18.07.2025 நடைபெற்ற இச்சிறப்பு திட்ட முகாமில் மொத்தம் 16741 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பிற துறைச்சார்ந்த 7173 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவது தொடர்பாக 9568 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 4410 மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணக்கூடிய மனுக்களாக பெறப்பட்டுள்ளது. 2783 மனுக்கள் 45 நாட்களுக்கு அதிகமாக தீர்வு காணக்கூடிய மனுக்களாக பெறப்பட்டுள்ளது. பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண அரசு அலுவலர்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.