காபி வித் கலெக்டர் 168வது கலந்துரையாடல் நடைபெற்றது

காபி வித் கலெக்டர் 168வது கலந்துரையாடல் நடைபெற்றது;

Update: 2025-04-23 15:46 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உலக புத்தகத்தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 65 ஆசிரியர்களுடனான "Coffee With Collector” என்ற 168- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, தொடக்க நிலையில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, ஆளுமை திறன் வளர்ச்சி, எதிர்கால சிறந்த மாணவ செல்வங்களை உருவாக்குதல், அரசின் நலத்திட்டங்கள் குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ ஃ மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 168-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்;ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, இன்று நடைபெற்ற 168 -வது காபி வித் கலெக்டர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார். மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும். குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்தும், அரசு பள்ளி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்தும், அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகைகள் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். உயர்கல்விக்கு செல்லாததற்கு மாணவர்களிடையே ஆர்வமின்மையும் ஒரு காரணமாக உள்ளது. இது குறித்து மாணவர்களிடையே எடுத்துக்கூறி அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Similar News