பேராவூரணி பகுதியில் ஜூன்-19 வியாழக்கிழமை மக்களுடன் முதல்வர் முகாம் 

மக்களுடன் முதல்வர் முகாம்;

Update: 2025-06-17 16:16 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், நாளை வியாழக்கிழமை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர்  பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி  "மக்களுடன் முதல்வர் திட்டம்" அனைத்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில்,  ஆதிதிராவிடர் குடியிருப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.  மூன்றாவது கட்டமாக தற்போது 19.06.2025 வியாழக்கிழமை அன்று பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.  இதில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.              பேராவூரணி வட்டாரத்தில் 19.06.2025 அன்று பாலத்தளி குரூப் எண்ணானிவயல் நெல்கொள்முதல் நிலையத்திலும், பூவாளூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், களத்தூர் அய்யனார் கோவிலிலும், பெரியநாயகிபுரம் ஊராட்சி ஆவணம் சமுதாயக்கூடத்திலும், அம்மையாண்டி ஊராட்சி ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு D.G.L திருமண மஹாலிலும், மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறவுள்ளன. மேற்கண்ட முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று முகாம் நாளன்று, அம்மனுக்களை இணையவழியில் பதிவு செய்து தீர்வு காணப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விபரங்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சிகள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.  எனவே, மேற்கண்ட ஊராட்சிப்பகுதிகளில் 19.06.2025 அன்று காலை 10 மணி முதல் நடைபெறவிருக்கும் முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள்   கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.  மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாட்களில் மக்களுக்கு வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News