கோவையில் 19 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை: பீகார் வாலிபர் கைது !

சாலையில் நடந்த சென்ற மாணவியை தனிமையான இடத்திற்கு இழுத்துச் செல்ல முயன்ற வாலிபர் கைது.;

Update: 2025-06-18 04:27 GMT
கோவை அருகேயுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.Sc. கணினி அறிவியல் படிக்கும் 19 வயது மாணவியை, வீட்டிற்கு செல்லும் வழியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுகேந்திர் பாஷா என்பவர் திடீரென கட்டிப்பிடித்து தனிமையான இடத்திற்கு இழுத்துச் செல்ல முயன்றார். மாணவி கூச்சலிட, பொதுமக்கள் விரைந்து வந்து அவரை மடக்கிப் பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News