தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 199 வழக்குகள் தீர்வு

மதுரை வாடிப்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக 199 வழக்குகள் சமரச தீர்வு செய்யப்பட்டது;

Update: 2025-06-15 14:39 GMT
மதுரை மாவட்ட தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி, தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று (ஜூன்.14) நடந்தது. இங்கு வழக்குகளை வாடிப்பட்டி நீதிமன்ற நீதிபதிகள் ராமகிஷோர் செல்லையா ஆகியோர் விசாரணை செய்தனர். இதில், உரிமைகள் வழக்குகள், வாடகை பிரச்சினை, கொடுக்கல் வாங்கல், குடும்ப பிரச்சினை, குற்றவியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, நஷ்ட ஈடு வழக்கு, வங்கி கடன்,காசோலை மோசடி வழக்கு உள்ளிட்ட 199 வழக்குகளை விசாரணை செய்து அபராத தொகை ரூ. 1 கோடி 12லட்சத்து 6ஆயிரத்து 544 பெறப்பட்டது.

Similar News