காங்கேயத்தில் கத்தி முனையில் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற 2 பேர் கைது
காங்கேயம் உடையார் காலணியில் கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்துச் சென்ற 2 பேர் கைது
காங்கேயம் உடையார் காலணியைச் சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா இவர் காங்கேயத்தில் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை தனது கோழிக் கடைக்கு செல்வதற்காக அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்த போது 2பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கட்டி அன்வர் பாட்ஷாவை மிரட்டியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உடனே காங்கேயம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து வெள்ளகோயில் காவல் ஆய்வாளர் ஞானப்பிரகாஷ்(பொறுப்பு) மற்றும் காங்கேயம் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தியதில் சந்தேகத்தின் பேரில் 2 பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஈரோட்டில் சேர்ந்த பவித்ரன் (வயது 22) மற்றும் ராஜசேகரன் (22) என்பதும் தெரியவந்தது. பின்னர் இவர்கள்தான் அதிகாலை 4மணிக்கு அன்வரை மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதும் தெரிய வந்தது. பின்னர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.