கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவர் வீட்டில் ஒயர் திருடிய 2 பேர் கைது
கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவர் வீட்டில் ஒயர் திருடிய 2 பேர் கைது;
கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவர் வீட்டில் ஒயர் திருடிய 2 பேர் கைது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கே.என்.பாளையத்தைச் சேர்ந்தவர்ரவிச்சந்திரன்(42). இவர் கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவராக இருந்து வருகிறார். இவர் அங்குள்ள ஸ்ரீ வேலா நகர் என்ற பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டிற்கு தேவையான 26 காயில் செம்பு ஒயர்களைப் பொருத்தியிருந்தார். மறுநாள் காலை சென்று பார்த்த போது 26 கிலோ எடை கொண்ட காப்பர் ஒயர்களை 2 பேர் திருடிச் சென்றது தெரிய வந்தது. ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டி.ஜி.புதூரைச் சேர்ந்த கோவிந்தராஜ்(25) மற்றும் அத்தியப்ப கவுண்டன்புதூரைச் சேர்ந்த ஆனந்த்(33) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.