கொலை முயற்சியில் ஈடுபட்ட 2பேரை தடுத்து கைது செய்த போலீசார் : எஸ்பி பாராட்டு!
ஆத்தூர் அருகே கொலை முயற்சியில் ஈடுபட்ட 2பேரை தடுத்து அவர்களை உடனடியாக கைது செய்து, காயம்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
ஆத்தூர் அருகே கொலை முயற்சியில் ஈடுபட்ட 2பேரை தடுத்து அவர்களை உடனடியாக கைது செய்து, காயம்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் to தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள முக்காணி பகுதியில் நேற்று (27.12.2024) முக்காணி பகுதியை சேர்ந்த நயினார் மகன் சுயம்புலிங்கம் (38) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அவரது உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் நாராயணன் (38) மற்றும் பூவான் (எ) அய்யாத்துரை மகன் மாரியப்பன் (எ) பெரிய முண்டன் (38) ஆகிய இருவரும் சேர்ந்து தகராறு செய்து அரிவாளால் தாக்கிக் கொண்டிருந்தபோது, அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை காவலர்கள் குமரேசன், ராஜபாண்டியன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு நாராயணன் மற்றும் மாரியப்பன் (எ) பெரிய முண்டன் ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தும், அரிவாளால் காயம்பட்ட சுயம்புலிங்கத்தை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தும் துரிதமாக செயல்பட்டனர். மேற்படி ஆத்தூர் பகுதியில் கொலை சம்பவம் ஏற்படாமல் தடுத்தும், காயம்பட்டவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் துரிதமாக செயல்பட்ட மேற்படி சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் ஆகிய 3 காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (28.12.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.