நாட்டு வெடிகுண்டு வீசிய 2 ரவுடிகள் கைது
1 நாட்டு வெடிகுண்டு மற்றும் வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூல பொருட்களை பறிமுதல்;
பொன்மலைப்பட்டியில் நாட்டு வெடிகுண்டு வீசிய பிரபல ரவுடியை பொன்மலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, பொன்மலைபட்டி மலையடிவாரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி (எ) டேஞ்சர் மணி. இவர் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தான் ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார். இத்தொடர்ந்து டேஞ்சர் மணி ஜன.19ம் தேதி தன் வீட்டில் இருந்த மாடு காணாமல் பொய்விட்டதாகவும், அது சென்ற இடத்தை கண்டுபிடிக்க பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் அவர்களது வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காட்டும் படி கேட்டுள்ளார். அவர்கள் வீட்டில் ஆள் இல்லாதால் சிசிடிவி காட்சிகளை காண்பிக்க முடியாது என கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த டேஞ்சர் மணி அவர்களது வீட்டின் முன் மது போதையில் வந்த தகராறு செய்துள்ளார். பின்னர் தான் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை தன் பக்கத்துவீட்டின் வாசலில் வீசிவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த பொன்மலை போலீசார் வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை சோதனை செய்தனர்.மேலும் வேறு ஏதும் குண்டுகளை பதுக்கி வைத்துள்ளாரா என டேஞ்சர் மணியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில் போலீசார் 1 நாட்டு வெடிகுண்டு மற்றும் வெடிகுண்டு தயாரிக்க தேவையான மூல பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான டேஞ்சர் மணி அப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் டேஞ்சர் மணியையும் அவனது மற்றோரு கூட்டாளியான பொன்மலைப்பட்டி, அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா (எ) கோப்பு ராஜாவையும் பொன்மலை போலீசார் கைது செய்தனர். இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தால் பொன்மலைப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.