குமரியில் பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது

கன்னியாகுமரி;

Update: 2025-02-21 12:18 GMT
கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகே உள்ள முக்கோண பூங்கா பகுதியில்  கடை வைத்திருக்கும் ஒருவர் தனது பைக்கை கடை  அருகே நிறுத்தி இருந்தார். பின்னர் அவர் வந்து பார்த்தபோது அவருடைய பைக் திருட்டு போனது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி வியாபாரிகள் பைக்கை தேடி பார்த்தனர். ஆனால் பைக் கிடைக்கவில்லை.      இதை தொடர்ந்து கன்னியாகுமரி, குண்டலருகே உள்ள காசி விசுவநாதர் கோயில் அருகில் அந்த பைக் நிறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது.  பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததால் அதனை திருடி சென்ற 2பேர் பெட்ரோல் வாங்கி வந்து பைக்கில் ஊற்றிக் கொண்டிருந்தனர். அவரிடம் வியாபாரிகள் விசாரித்த போது முரணாக பதில் கூறினார்கள். இதை அடுத்து வியாபாரி ஒருவரை  பைக் திருடன் தாக்க முயன்றான்.       இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் சேர்ந்து இரண்டு பேரையும் சரமாரியாக தாக்கினார். இது குறித்த தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, மேலராமன்புதூரை சேர்ந்த ஜவகர் ( 28), ஆண்டனி பிரகாஷ் (32) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

Similar News