மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய 2 பேர் மீது வழக்கு

வாகனங்கள் பறிமுதல்;

Update: 2025-02-23 12:11 GMT
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் எல்லைக்குட்பட்ட நல்லூர் பகுதியில் அனுமதியின்றி தனியாருக்கு சொந்தமான இடத்தில் செம்மண் கடத்துவதாக மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்த போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அனுமதி இன்றி செம்மண் கடத்தியது  தெரிய வந்தது.       உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது டெம்போ விட்டுவிட்டு டிரைவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் செம்மண் கடத்த பயன்படுத்திய இரண்டு டெம்போ மட்டும் ஹிட்டாச்சி போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.        மேலும் உரிமையாளர் மற்றும் டிரைவர் என இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News