குமரி மாவட்டம் இடைக்கோடு பேரூராட்சியில் மேல்புறம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைந்துள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்தில் கடந்த சில நாட்களாக இரவில் ஐந்து பேர் வந்து தங்குவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட சமுதாய நலகூடத்தில் சென்று, அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விசாரித்தனர். விசாரித்ததில் ஐந்து பேரும் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குத்தகைகாரர்கள் மூலம் குமரியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு பெயிண்ட் அடிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். தற்போது அடுமனைப் பகுதியில் வேலை நடப்பதால் இங்கு வந்து தங்கியதாக கூறினார். இல்லாமல் பேரூராட்சி நிர்வாகத்தினர் 5 பேரையும் தங்க வைத்தது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தகராறு ஆக மாறி, தாக்கியதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். பின்னர் போலீசார் ஐந்து பேரையும் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சமுதாய நலக்கூட சாவி கொடுத்த கவுன்சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சி தலைவி உமாதேவி என்பவர் அருமனை போலீசில் புகார் அளித்துள்ளார்.