குற்றாலம் அருவிகளில் வெள்ளம்: 2வது நாளாக குளிக்கத் தடை
அருவிகளில் வெள்ளம்: 2வது நாளாக குளிக்கத் தடை;
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் 3ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பகுதியில் கடந்த 2நாள் முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. தொடா்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து குறையாததால் 3ஆவது நாளாக இன்று குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.