குமரி மாவட்டம் காஞ்சிர கோடு பகுதியை சேர்ந்தவர் ரஜினி காமித் (49). விவசாயி. இவர் நேற்று காஞ்சி ரகோடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மருதங்கோடு சாஸ்தா பொற்றை என்ற இடத்தை சேர்ந்த மரியதாஸ் மகன் ஸ்டாலின் ( 28), வட்டத்து விளையை சேர்ந்த ராஜி மகன் ரெஜின் ( 23) ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் ரஜினி காமித் பணம் கொடு க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் அவரை தாக்கியுள்ளனர். மேலும் அவர் சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூபாய் 300 - ஐ பறித்து விட்டு அங்கிருந்து சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட ரஜினி காமித் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் பணம் பறித்த ஸ்டாலின், ரெஜின் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.