கோயிலில் திருடிய சிறுவன்: 2 மணி நேரத்தில் பிடித்த போலீசார்
குற்றச்செய்திகள்;
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கலிபுல்லா நகரில் உள்ள செல்வகணபதி விநாயகர் கோயில் உண்டியலில் உள்ள பணத்தை 16 வயது சிறுவனை திருடியுள்ளானர். அதன் விசாரணையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், திருட்டு நடந்த இரண்டே மணி நேரத்தில் திருட்டில் ஈடுபட்ட சிறுவனை பொதுமக்கள் உதவியோடு போலீசார் பிடித்தனர். தனது செல்போனை சரிசெய்ய ரூ.300 தேவைப்பட்டதால் திருடியதாக சிறுவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.