பட்டா கத்தியுடன் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்லில் பட்டா கத்தியுடன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் கைது;

Update: 2025-03-22 05:45 GMT
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நாகல் நகர் சந்தை ரோடு பகுதியில் பட்டாக்கத்தியுடன் நின்று கொண்டிருந்த முத்தழகு பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மகன் அஜித்பாண்டி(29), பாரதிபுரத்தை சேர்ந்த பிச்சை மகன் அன்பில்ராஜ்(31) ஆகிய இருவரும் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தபோது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News