திருப்பத்தூர் அருகே சொத்து தகராறில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய தந்தை மகன் 2 பேர் கைது.

திருப்பத்தூர் அருகே சொத்து தகராறில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய தந்தை மகன் 2 பேர் கைது.;

Update: 2025-04-03 22:20 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சொத்து தகராறில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய தந்தை மகன் 2 பேர் கைது. திருப்பத்தூர் மாவட்டம்   கந்திலி அருகே இலவம்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் திருப்பதிக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினரான வீரபத்திரன் மற்றும் அவரது மகன் குமரவேல் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில் பொது விவசாய கிணற்றில் தண்ணீர் இரைப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த திருப்பதி, வீரபத்திரன், குமரவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருப்பதி அளித்த புகாரின்பேரில் கந்திலி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீரபத்திரன், குமரவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Similar News