சேலம் அருகே வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனமுத்து மற்றும் போலீசார் நேற்று பள்ளிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 61) என்பவர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் நேற்று தாதகாப்பட்டி காளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தனலெட்சுமி (48) என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.