ராஜபாளையத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் கருணை உண்டியல் மூலம் சேமிக்கப்பட்ட தொகை, ரூ. 2 ஆயிரம் கண்பார்வை இழந்த மாற்றுத் திறனாளிக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டது.*

ராஜபாளையத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் கருணை உண்டியல் மூலம் சேமிக்கப்பட்ட தொகை, ரூ. 2 ஆயிரம் கண்பார்வை இழந்த மாற்றுத் திறனாளிக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டது.*;

Update: 2025-04-22 17:00 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் கருணை உண்டியல் மூலம் சேமிக்கப்பட்ட தொகை, ரூ. 2 ஆயிரம் கண்பார்வை இழந்த மாற்றுத் திறனாளிக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாலையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கருணை உண்டியல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் தினமும் வழங்கும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் சில்லரை 1,100 ஆக உயர்ந்த உடன், ஆசிரியர்களின் பங்களிப்பு ரூபாய் 900 இணைத்து, ரூ. 2 ஆயிரத்தை கண் பார்வை இழந்த மாற்றுத்திறனாளியான கணேசன் என்பவருக்கு மாணவர்கள் உதவித் தொகையாக வழங்கினார்.

Similar News