ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 2 பேருக்கு காப்பு.

ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 2 பேருக்கு காப்பு.;

Update: 2025-06-17 00:55 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்ற அருண் (19). இவரது நண்பர் பிரதீப் ஆகிய இருவரும் ஓசூர் தனியார் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் இதே நிறுவனத்தில் சர்வீன்பிரிக்ஸ் (25) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். இந்த நிலையில் சர்வீன் பிரிக்ஸ், பிரதீப்புக்கு வேலையை ஒதுக்கி செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. அதற்கு பிரதீப் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இதுதொடர்பாக சமாதானம் பேசிய அருண்குமாரை சர்வீன் பிரிக்ஸ், ஜோதி மணி (28), பிரபாகரன் (27) உள்பட நான்கு பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணி, பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Similar News