சிறுவாணை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி சரிவு – அதிகாரிகள் அதிர்ச்சி!
கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணை அணையில், கேரளா அரசு மதகையை திறந்து தண்ணீர் வெளியிட்டதால், நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி குறைந்து 43.13 அடியில் இருந்து 41.33 அடியாக சரிந்துள்ளது.;
கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணை அணையில், கேரளா அரசு மதகையை திறந்து தண்ணீர் வெளியிட்டதால், நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி குறைந்து 43.13 அடியில் இருந்து 41.33 அடியாக சரிந்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு தினமும் 10.1 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகின்ற நிலையில், எதிர்பாராத விதமாக 9.97 கோடி லிட்டர் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு காரணமாக கிளை ஆறுகளில் அதிக நீர் வரத்து, மழைப்பொழிவு மற்றும் வனவிலங்குகளுக்கான தாகம் தீர்க்கப்படுவதை கேரளா அரசு கூறியுள்ளது. பொதுவாக 5 செ.மீ. திறக்கப்படும் மதகை,50 செ.மீ. உயரத்திற்கு திறக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது தமிழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மதகைகளை மூட செய்துள்ளனர். இதன் விளைவாக கோவை மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.