திமிரி அருகே ஆயுதங்களுடன் வந்த 2 பேர் கைது
ஆயுதங்களுடன் வந்த 2 பேர் கைது;
திமிரி அருகே ஆற்காடு-ஆரணி சாலையில் பரதராமி பேருந்து நிறுத்தத்தில் திமிரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த 2 இளைஞர்களை மடக்கி சோதனை செய்தபோது கையில் கத்தி வைத்திருந்தனர். விசாரணையில் அவர்கள் ஆரணி அடையபுலம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் மணிகண்டன் வயது (வயது 26) மற்றும் ஆரணி ராட்டினமங்கலம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சதீஷ் வயது (22) என்பது தெரியவந்தது. அவர்களை திமிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாதன் கைது செய்து வாலாஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.