வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது
வேடசந்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 6.1/2 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சத்தை திருடிய 2 கொள்ளையர்கள் கைது;
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜிநகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ்(37) தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 11-ம் தேதி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 6.1/2 பவுன் நகைகள், ரூ.ஒரு லட்சத்தை திருடி சென்றது குறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் மற்றும் காவலர்கள் வேடசந்தூர் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேலும் திருச்சி,கரூர் பகுதிகளிலும் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் கோகுல் 28, திருச்சியை சேர்ந்த ஜாபர்அலி மகன் முகமதுரியாஸ் 28, ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோகுல் மீது திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 18 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.