விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் நல்லாம்பட்டி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது;
திண்டுக்கல் புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது நல்லாம்பட்டி, ராஜாகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து செய்து விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் அவர்கள் பொன்னகரம், காந்திநகர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் திஷோன்(25), பர்மாகாலனியை சேர்ந்த ராஜசேகர் மகன் சுதர்சன்சூர்யா(25) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.