கரூரில் 2- மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன், உதவி கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோர்.

கரூரில் 2- மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன், உதவி கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோர்.;

Update: 2025-07-07 11:42 GMT
கரூரில் 2- மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன், உதவி கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோர். கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சியில் உள்ள மருதம்பட்டி காலனி சேர்ந்தவர் முருகன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி. இவர்கள் தங்களது எலும்புச்சத்து குறைபாடால் மிகவும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத இரண்டு குழந்தைகளை,இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு காரில் படுக்க வைத்தவாறே ஆட்சியர் அலுவலகத்திற்கு உதவி கேட்டு மனு கொடுக்க வந்தனர். அவரது மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலரை அழைத்து தேவையான உதவிகளை செய்து தருமாறு பணித்தார்.

Similar News