காட்டு மாடுகளை அச்சுறுத்திய 2 பேருக்கு அபராதம்
கொடைக்கானலில் காட்டு மாடுகளை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 2 வாலிபர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெர்னில் ரோடு பகுதியில் நேற்று இரவு 2 மாடுகள் சாலை ஓரமாக சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த சூர்யா மற்றும் கார்த்தி ஒருவர் இருசக்கர வாகனத்தை விட்டு கீழே இறங்கி மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து காட்டு மாடுகளின் அருகே சென்று இருக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பியும் முன்னும் பின்னும் சென்று சாகசம் செய்து மற்றொருவர் சமூக வலைதளத்தில் பதிவிடும் நோக்கத்தில் செல்போன் மூலம் படம் பிடித்து கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து சென்ற வனத்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.