வால்காட்டுப்புதூர்- பஞ்சு உற்பத்தி ஆலையில் தீ விபத்து 2 கோடி மதிப்பிலான பொருட்கள் கருகிநாசம்.
வால்காட்டுப்புதூர்- பஞ்சு உற்பத்தி ஆலையில் தீ விபத்து 2 கோடி மதிப்பிலான பொருட்கள் கருகிநாசம்.;
வால்காட்டுப்புதூர்- பஞ்சு உற்பத்தி ஆலையில் தீ விபத்து 2 கோடி மதிப்பிலான பொருட்கள் கருகிநாசம். கரூர் மாவட்டம் வால் காட்டு புதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பருத்தி பஞ்சு உற்பத்தி ஆலை கடந்த 10- ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை கரூர் அடுத்த ராயனூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சுமார் 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல் இன்று காலை ஊழியர்கள் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது Cotton Opener என்ற இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கரூர் தீயணைப்பு நிலைய மீட்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள், உதிரிபாகங்கள் என சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து கருகியது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.