பாலக்காடு அருகே தடுப்பணையில் மூழ்கி 2 கோவை மாணவர்கள் பலி !
பாலக்காடு சண்முகம் தடுப்பணையில் கோவை மாணவர்கள் 2 பேர் மூழ்கி உயிரிழப்பு;
பாலக்காடு மாவட்டம் சித்தூர் அருகே சண்முகம் தடுப்பணையில் குளிக்கச் சென்ற கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி மாணவர்கள் கவுதம் (20, ராமேசுவரம்) மற்றும் அருண் (21, நெய்வேலி) மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று 6 பேர் குழுவாக வந்த மாணவர்கள் தடுப்பணையின் மடைவழியாக மறுபுறம் செல்லும் போது, தண்ணீர் வேகத்தால் வெளியே வர முடியாமல் சிக்கினர். சக மாணவர்கள் காப்பாற்ற முடியாத நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கவுதத்தின் உடலை முதலில் மீட்டனர்; மாலை 5.30 மணிக்கு அருணின் உடலும் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் கல்லூரி நண்பர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.