தமிழக முதல்வர் ஸ்டாலின் – கோவை, பொள்ளாச்சி 2 நாள் பயணம்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கோவை வந்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.;

Update: 2025-08-11 08:46 GMT
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்பு ஒத்திவைக்கப்பட்ட கோவை மாவட்ட சுற்றுப்பயணத்தை தற்போது மேற்கொண்டுள்ளார். நேற்று கோவை விமான நிலையம் வந்த அவர், திருப்பூர் உடுமலைப்பேட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து இரவு தங்கினார். இன்று காலை உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். பிற்பகலில் பொள்ளாச்சியில் காமராஜர், வி.கே. பழனிச்சாமி, கவுண்டர் சுப்பிரமணியம், மகாலிங்கம் ஆகியோரின் சிலைகள், பரம்பிக்குளம் ஆழியாறு அணை தொழிலாளர் நினைவரங்கு, வி.கே. பழனிச்சாமி அரங்கம் ஆகியவற்றை திறந்து வைக்க உள்ளார். மேலும் பாசனத் திட்ட புகைப்பட கண்காட்சி மற்றும் மாதிரி வடிவத்தை பார்வையிட உள்ளார். நிகழ்ச்சிகள் முடிந்து கோவை திரும்பும் அவர், விமானம் மூலம் சென்னை புறப்படுவார். முதலமைச்சர் வருகை காரணமாக கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் மொத்தம் 1,300 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Similar News