வாகனம் மோதி 2 மின்கம்பங்கள் சாய்ந்தன : மின் விநியோகம்

தூத்துக்குடியில் வாகனம் மோதியதில் 2 மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. ;

Update: 2025-09-05 08:43 GMT
தூத்துக்குடியில் வாகனம் மோதியதில் 2 மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.  தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூர் இபி காலனியில் தாழ்வழுத்த மிண் பாதையில்  தனியார் வாகனம் மோதி  இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும், தாழ்வழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மடத்தூர், இபி காலனி பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் சீரான மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News