திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேர் கைதுஆயிரம் போதை மாத்திரைகள் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் மோட்டார் சைக்கிள் பறிமுதல்

திருச்செங்கோடு சூரியம்பாளையம் தலைமை தபால் நிலையம் அருகே பார்சலில் வந்த 1000 (ஆயிரம்) போதை மாத்திரை வைத்திருந்த ஸ்ரீகாந்த் திலீப் குமார் என்றஇரண்டு வாலிபர்கள் கைது.ராஜஸ்தானில் இருந்து ஸ்பீடு போஸ்ட் பார்சல்மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்திருப்பது அம்பலம்;

Update: 2025-10-03 14:21 GMT
திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பேர் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை எடுத்து திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி தலைமையில் போலீசார் அங்கு சோதனை இட சென்றபோது சந்தேகத்திற்கிடமான வகையில் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் வண்டியில் வந்த இரண்டு பேரைப் பிடித்து தனித்தனியே விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடமிருந்த ஒரு பார்சலை கைப்பற்றி விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் பார்சலை பிரித்துப் பார்த்தபோது திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்திற்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் வந்த பார்சல் என்பதும் அது ராஜஸ்தானில் இருந்து வர வழைக்கப் பட்டிருப்பதும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வந்திருப்பதும் அதற்குள்Tapentadol டெப்ன்டாடோல் என்ற போதை தரும் மாத்திரைகள் ஆயிரம் இருப்பதும் தெரிய வந்தது. இதனை வைத்து இருந்த திருச்செங்கோடு பெரிய பாவாடி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் - 20 த.பெ.செல்வராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மரவ பாளையத் தான்காடு ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்ததிலீப் குமார் 23 த.பெ.கிருஷ்ணன்ஆகிய இருவரையும்கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் வந்த Tn 34 k 7786ஆகியவற்றையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News