புதருக்குள் மறைத்து கள்ளச் சந்தையில் மது விற்ற 2 பேர் கைது – 120 பாட்டில்கள் பறிமுதல்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே, புதருக்குள் மறைத்து அதிக விலைக்கு மது விற்ற இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.;
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே, புதருக்குள் மறைத்து அதிக விலைக்கு மது விற்ற இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மிலாடி நபி தினத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால், சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், பேரூர் காவல் நிலையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியில், கலிங்கநாயக்கன்பாளையம் அருகே மது பாட்டில்களை விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், சௌந்தரபாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.