மரம் வெட்டும் போது உயிரிழந்த 2 ஒப்பந்த தொழிலாளர்கள் : 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மரம் வெட்டும் போது உயிரிழந்த 2 ஒப்பந்த தொழிலாளர்கள் : 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை;
அம்பத்தூர் தொழில்பேட்டையில் மரம் வெட்டும் போது உயிரிழந்த 2 ஒப்பந்த தொழிலாளர்கள் மேலும் 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி, உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தகவலை தாமதமாக கூறியதாக. உறவினர்கள் நியாயம் கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் நள்ளிரவில் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்ததால் பரபரப்பு தனியார் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் சூப்பர்வைசரை கைது செய்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கெமின் இண்டஸ்ட்ரிஸ் சவுத் ஏசியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் சுற்று சுவர் அருகே பக்கத்து வளாகத்தில் உள்ள அதிகமாக வளர்ந்த மரங்களை தங்கள் நிறுவனத்திற்குள் வந்ததால் வெட்டுவதற்காக ஒப்பந்த பணியாளர்கள் தேவைப்பட்டது.. கார்பெண்டர் வேலை உள்ளதாக 5 பேரை மேலாளர் தண்டபாணி என்பவர் மூலமாக அழைத்து வந்துள்ளனர்.அப்போது இதில் 3 பேர் மட்டும் மரம் வெட்டும் பணிகளில் ஈடுபட வேண்டும் என மேலாளர் தெரிவித்துள்ளார்..இந்நிலையில் முன் அனுபவம் இல்லாத நபர்கள் மரம் ஏறி வெட்டும் பொழுது மரம் திடீரென்று சாய்ந்து சுற்றுச்சுவர் மீது விழுந்து பணி செய்து கொண்டிருந்த நபர்களும் கீழே விழுந்தனர் இதில் தங்கராஜ் ,விஜயகுமார் மதியம் 1மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிர்இழந்தனர்.மேலும் 3 பேர் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் குறித்து தனியார் நிறுவனமும் தொழிற்பேட்டை காவல் துறையினரும் மாலை 5 மணிக்கு தகவல் தெரிவித்ததாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மன உளைச்சலில் காவல் நிலையத்தில் அம்பத்தூர் உதவி ஆணையர் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து உயிரிழந்த நபர்களின் 2 பேரின் குடும்பத்தினரும் தங்கள் உறவினருடன் சேர்ந்து நீதி வேண்டுமென தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் கெமின் நிறுவனத்தில் சென்று முறையிட்டனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால் பணியில் இருந்த தனியார் காவலர்களுக்கும் உயிரிழந்த குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில். சாலையில் கிடந்த கற்களைக் கொண்டு அங்கிருந்த கண்காணிப்பு அலுவலகத்தை அடித்து உடைத்து உள்ளே சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அங்கு போலீசாரும் இல்லாததால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிந்து கொண்ட தனியார் காவலர்கள் உள்ளே சென்று காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் சரக காவல் உதவி ஆணையர் ரூபன் ஆய்வாளர் கோபிநாத் மாற்றும் காவல் துறையினரை முற்றுகையிட்டனர்.. பிரச்சனையில் ஈடுபட வேண்டாம் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என காவல் துறையினர் அறிவுறுத்தியும் அதனை பொருட்படுத்தாமல் உறவினர்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் மனைவி தனியார் நிறுவனத்தின் சுற்றுசுவர் ஏறி குதிக்க முயற்சி செய்து பெரும் பூச்செலிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனால் கூடுதலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் இந்த 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தொழிற்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிறுவன மேலாளர் மற்றும் சூப்பர்வைசரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.