வரும் பிப்ரவரி 2ம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் கனக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பின்
32 ஆண்டுகளுக்குப் பின் கங்கைகொண்ட சோழபுரம் கனக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 2ம் தேதி நடக்கிறது;
அரியலூர் டிச.20- உலகப் புகழ் பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி நடைபெற உள்ளது இதற்கான முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கங்கைகொண்ட சோழபுரம் மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழனால் வழிபாடு செய்யப்பட்ட அருள்மிகு கணக்க விநாயகர் ஆலய திரு குடமுழுக்கு விழா 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் தை மாதம் 20 தேதி பிப்ரவரி 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது திருக்கோயில் செயல் அலுவலர் செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் , தலைமை அர்ச்சகர் தியாகராஜ குருக்கள் மற்றும் இராஜேந்திர சோழன் அறக்கட்டளை தலைவர் இராஜேந்திரன் மற்றும் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக திருவிழாவை அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து சிறப்பாக நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.