மொடச்சூர் வாரச்சந்தையில் தங்கியிருந்த 20 குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுப்பி வைப்பு
மொடச்சூர் வாரச்சந்தையில் தங்கியிருந்த 20 குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுப்பி வைப்பு;
மொடச்சூர் வாரச்சந்தையில் தங்கியிருந்த 20 குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுப்பி வைப்பு கோபி அருகே உள்ள மொடச்சூரில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமையை தவிர மற்ற நாட்களில் சந்தை திடல் பயன்படுத்தப்படுவது கிடையாது. இதனால் சந்தை திடலில் உள்ள காய்கறி விற்பனை செய்யப் படும் இடங்களில் வெளியூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குழந்தைகளுடன் தங்கி இருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அளுக்குளி அருகே எம்.ஜி.ஆர். காலனியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன ஆனால் அங்கு பொருட்களை கொண்டு செல்ல வாகனங்கள் இல்லை என அவர்கள் கூறினர். இதனால் நகராட்சி சார்பில் வாகனங்களில் பொருட்கள் ஏற்றப்பட்டு அனைவரும் குடியிருப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட 20 குடும்பத்தினரும் மீண்டும் பொருட்களுடன் மொடச்சூர் வாரச்சந்தைக்கு வந்தனர். இந்தநிலையில் கடந்தசில நாட்களுக்கு முன்பு கவுந்தப்பாடி போலீஸ் நிலைய பகுதியில் ஒரு கொள்ளை நடந்தது. இது தொடர்பாக 2 பேர் மொடச்சூர் வாரச்சந்தையில் தங்கியி ருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர். எனவே இங்கு குற்றவாளிகள் தங்குவதை தடுக்கும் வகையில் கோபி நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மொடச்சூர் வாரச்சந்தைக்கு சென்று அங்கு தங்கியிருந்த 20 குடும்பத்தினரை அப்புறப்படுத்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புக்கு அனுப்பி வைத்தனர்.