ஆம்பூர் அருகே சொத்துதகராறில் ஊராட்சி மன்ற தலைவரான சித்தியை 20க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்திய இளைஞர்*..

ஆம்பூர் அருகே சொத்துதகராறில் ஊராட்சி மன்ற தலைவரான சித்தியை 20க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்திய இளைஞர்*..;

Update: 2025-02-28 05:52 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சொத்துதகராறில் ஊராட்சி மன்ற தலைவரான சித்தியை 20க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்திய இளைஞர்.. உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதி. இளைஞரை கைது செய்து உமராபாத் காவல்துறையினர் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியகொமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரான ஷோபனா கோவிந்தராஜ், கணவரை இழந்த இவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வரும் நிலையில், ஷோபனாவின் கணவரின் சகோதரரான, பாண்டியன் என்பவருக்கும், ஷோபனா குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக சொத்துதகராறு இருந்து வரும் நிலையில், இன்று ஷோபனா வீட்டில் தனியாக இருந்த போது, அவரது வீட்டிற்கு வந்த பாண்டியனின் மகனான சந்தோஷ் என்ற இளைஞர், ஷோபனாவின் வீட்டில் நுழைந்து கதவை தாழிட்டு, ஷோபனாவை கத்தியால் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார், உடனடியாக ஷோபனாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து ஷோபனாவை மீட்டு சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அதனை தொடர்ந்து ஷோபனாவை மருத்துவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சையிற்காக அனுப்பி வைத்தனர், அதனை தொடர்ந்து சந்தோஷை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கி உமராபாத் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.. அதனை தொடர்ந்து சந்தோஷை உமராபாத் காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்குபதிவு செய்து மேலும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. அதனை தொடர்ந்து ஷோபனாவின் வீட்டில் ஆம்பூர் துணை காவல்கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர் நேரில் ஆய்வு மேற்க்கொண்டனர், இந்நிலையில் சொத்து தகராறில் ஊராட்சி மன்ற தலைவரான தனது சித்தியை இளைஞர் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் ஷோபாவின் கணவர் கோவிந்தராஜ் என்பவர் பெரிய கொம்மேஸ்வரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததால் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கோவிந்ராஜை கத்தியால் குத்தி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது,

Similar News