ராணிப்பேட்டையில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை!
குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை;
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பாலியல் குற்றம் புரிந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தணிகாசலம் (45) என்பவருக்கு 20 வருடங்கள் கடும் காவல் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தால் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை எஸ்.பி. பாராட்டினார்.