சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிகழ்ச்சி

நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிகழ்ச்சி;

Update: 2025-09-25 05:24 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிகழ்ச்சியை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு அந்தப் பகுதியில் உள்ள சாலை முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவி கவுசல்யா வெங்கடேஷ், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட யாராலமான தூய்மை பணியாளர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Similar News